History of Sabha

1. உள்ளுராட்சிமன்றம் பற்றியசுருக்க அறிமுகம்.

1.1  உள்ளுராட்சி மன்ற பிரிவின் புவியியல் அமைவு
இறக்காமம் பிரதேச சபையானது அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை தோ்தல் தொகுதியில்,அம்பாரை அக்கரைப்பற்று நகர்களை ஊடறத்துச் செல்லும் A12 பிரதான வீதியில் அமைந்துள்ளதுள்ளது. இச் சபையின் அலுவலகமானது அம்பாரை நகர சபையின் கிழக்குப்புறமாக 08 கிலோ மீட்டர் தூரத்திலும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் மேற்கு புறமாக 18 கிலோ மீட்டர் தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது. இது இறக்காமம், வரிப்பத்தான்சேனை, குடிவில், வாங்காமம், மாணிக்கமடு,  ஆகிய ஐந்து முக்கிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. 

இதன் எல்லைகளாக வடக்கே சம்மாந்துறை பிரதேசத்தையும் தெற்கே தமன பிரதேச செயலக பிரிவின் ஹிங்குரான கிராமத்தையும், கிழக்கே அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஆலங்குளம் கிராமத்தையும்மேற்கே அம்பாரை நகரத்தையும்; கொண்டுள்ளது. இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவின மக்களும் வாழ்கின்றனர். 

1.2 உள்ளுராட்சி மன்ற பிரிவுக்குள் அடங்கும் கிராம சேவையாளார் பிரிவுகளின்      எண்ணிக்கை

இறக்காமம் பிரதேச சபையானது 12 கிராம சேவகார் பிரிவுகளையும் 07 தோர்தல் வட்டாரங்களையும் கொண்டுள்ளதுடன் இது 84.3  சதுர கிலோ மீற்றார் பரப்பளவையும் கொண்டுள்ளது. 

1.3 சனத்தொகை (மொத்தக் குடும்பம், மக்கள் தொகை)

இப்பிரதேச சபையானது 4581 குடும்பங்களையும் 18035 பேரை சனத்தொகையாகவும் கொண்டிருப்பதுடன் அதில் 8665 ஆண்களாகவும்,8781 பெண்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் இங்கு வசிப்பவர்களில் 90.54 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் 7.11 வீதமானவர்கள் சிங்களவார்களாகவும் 2.35 வீதமானவார்கள் தமிழார்களாகவும் உள்ளனார். 

1.4 குறிப்பிட்டஉள்ளுராட்சி மன்ற பிரிவு மக்களால் எதிர் நோக்கப்படும் முக்கிய பிரச்சனைகள்

இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மக்களால் எதிர் நோக்கப்படும் முக்கிய பிரச்சினைகளாக   வீதிகள் சீரின்மையினால் போக்குவரத்து செய்வதில் சிரமங்களையும், முறையான வடிகான் அமைப்பு இல்லாமையினால் மழைக்காலங்களில் மழைநீரானது வழிந்தோட முடியாமல் வீதிகளில் தேங்கி நிற்பதனால் போக்குவரத்து சிரமங்களையும், தொற்று நோய்களையும் எதிர் நோக்குகின்றனார் இவற்றைவிட இரவு வேளைகளில் வீதிகள் இருளில் மூழ்கி காணப்படுதல், பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கான இடவசதியின்மை, போன்ற பிரச்சினைகளும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன.